காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வல்லம், வடகால் ஆகிய பகுதிகளில் 5 தொழில் பூங்காக்கள் உள்ளன. இந்த தொழில் பூங்காக்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கான பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.



 

கத்தியை காட்டி மிரட்டல்

 

இந்த நிலையில், நேற்று முன் தினம் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் விவரம் வருமாறு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார்.


 



அவர்  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது நண்பருடன் சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அவரைப் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி அழைத்து சென்றனராம். ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் செல்லும் சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று அவர்கள் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.


 

" காவலன் ஆப் "

 

இது குறித்து அந்த பெண் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகரில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 



 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் காதலன் உட்பட இரண்டு வாலிபர்களை பிடித்து பாலியல் பலாத்காரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். புகார் அளித்த பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 363,376,376D, 506 (ii),ஆகிய பிரிவில் கீழ் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண