சென்னை - கடற்கரை செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .


சென்னை மின்சார ரயில் 


சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பொது மக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலருக்கும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலை  பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். 


ரத்து செய்யப்படுவது வழக்கம் 


பொதுவாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் பராமரிப்புக்கு பணி காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. சென்னை கடற்கரை - விழுப்புரம் மற்றும் எழும்பூர் வழித்தடங்களில், பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


முழுமையாக ரத்தாகும் ரயில்கள்


இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரையில் இருந்து வரும் இரவு ரயில்கள் 9:10, 9:30 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் ரயில்களும் , இரவு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்கள் (10:40,11:20,11:40 ) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 5 மற்றும் 7ஆம் தேதிகளில் இந்த ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 


சென்னை கடற்கரையில் இருந்து இன்று, செப்டம்பர் 6 மற்றும் செப்டம்பர் எட்டாம் தேதிகளில் காலை 4:15 மணிக்கு புறப்படும் தாம்பரம் ரயில்களும் , இரவு 7:50 மணிக்கு புறப்படும் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 


பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் 


சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:05, 11:30,11:59 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் மின்சார ரயில்களும் இரவு 10.40 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் வருகின்ற செப்டம்பர் 5 மற்றும் 7ஆம் தேதி எழும்பூரில் இருந்து இயக்கப்படும். 


செங்கல்பட்டில் இருந்து இரவு 8:45, 9:10,1 0:10, 11 ஆகிய மணி நேரங்களில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் செப்டம்பர் 5 மற்றும் 7 திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். 


சென்னை கடற்கரையிலிருந்து 6 மற்றும் 8 தேதிகளில் காலை 3:55 மணிக்கு ‌ புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ ஒரு சில ரயில்கள் முழுமையாக, ஒரு சில ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


 


 


சென்னை கடற்கரை - செங்கல்பட்டியிலேயே மின்சார  ரயில்கள் முழுமையாகவும் சில ரயில்கள் எழும்பூர் வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அதற்கேற்றார் போல் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.