சென்னயில் இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில், கடந்த சில தினங்களாக வெயில் வாட்டிய நிலையில், திடீரென பெய்த மழையால் சென்னை குளிர்ந்துள்ளது. 


இந்நிலையில், அடுத்து 2 நாட்களுக்கு இடி- மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.






இதையடுத்து, பலரும் சென்னையில் பெய்து வரும் மழையை வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


தற்காத்துக்கொள்வது எப்படி?


திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும்,


மரங்களின் கீழ் நிற்க கூடாது,


புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் அருகில் கீழ் நிற்க கூடாது,


நீச்சல் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அபாய குறைப்பு முகமை தெரிவித்துள்ளது