கோவளத்தில் உள்ள புனித கார்மேல் மாதா ஆலயத்தில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது .

 

கோவளம்  புனித கார்மேல் மாதா 

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) :  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவளம் புரட்சியில், அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புனித கார்மேல் மாதா ஆலயத்தின் 215 ஆம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன்  கொடியேற்றத்துடன் துவங்கியது. மிகவும் பழமையான கார்மேக மாதா ஆலய கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கொடி ஏற்ற விழாவை கண்டுகளித்தனர். கொரோனா வைரஸ் தொட்டிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டுதான் மீண்டும் இந்த திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஆண்டு இந்த ஆண்டு மிகவும் விமரிசைமையாக இந்த திருவிழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 

தேர் பவனி

 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வருகின்ற 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் கலந்து கொள்கிறார். மறுநாள் 16-ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. இந்த விழாவின் ஏற்பாடுகளை கோவளம் கார்மேல் மாதா ஆலய அதிபர் அமலோற்பவராஜ் உள்பட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.



 

தூய கார்மேல் அன்னை அறிமுக வரலாறு

 

தூய கார்மேல் அன்னை அல்லது தூய கார்மேல் மலை அன்னை அல்லது புனித உத்தரிய மாதா என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறித்துவின் தாயான தூய கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயராகும். கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை மரியாவின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே மரியாவுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண