திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரப்பகுதியில் உள்ள அருணகிரிசத்திரம் கண்ணப்பன் தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் சரணவன் வயது (50). இவர் ஆரணியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு துறை துணை அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஜெயலட்சுமி வயது (48) என்ற மனைவியும் விக்னேஷ் ஜெகதீஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அவரது மனைவி ஜெயலட்சுமி இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு மதியம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சரவணன் வீட்டில் ஆறு மாதமாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஸ்டவ் அடுப்பை எடுத்து அதில் மண்ணெண்ணெய் ஊற்றி வேகமாக பம்பு செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத நிலையில் ஸ்டவ் வெடித்துள்ளது. அந்த நேரத்தில் ஜெயலட்சுமி கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். ஸ்டவ் வெடித்ததில் மண்ணெண்ணெய் சிதறி கேஸ் தீயில் பட்டதால் ஜெயலட்சுமியின் புடவையில் தீ நன்றாக பிடித்து மளமளவென எரிய தொடங்கியதில் அவர் அலறியுள்ளார்.


மனைவி உயிரிழப்பு


ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்த தீயணைப்பு துறை துணை அலுவலர் சரவணன் மனைவியை காப்பாற்ற முயன்றார். சரவணனின் உடையில் தீ பிடித்து மளமளவென எரிந்துள்ளது, சமையலறையில் மிகவும் சிறியது என்பதால் இருவரிலும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். காப்பாற்ற முயன்ற கணவர் தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


தீயணைப்பு வீரர் உயிரிழப்பு 


மேலும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தீயணைப்பு வீரர் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் தந்தை இழந்த இரண்டு மகன்கள் நிலமையை கண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண