சென்னை புளியந்தோப்பில் நேற்று சையத் யூனுஸ் என்பவர் நோன்பு திறந்து டீக்கடைக்கு டீ குடிக்க சென்ற போது அப்பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வரும் காட்சிகளை பேசி நீ தீவிரவாதி போல் இருக்கிறாய் என்று சையத் யூனுசிடம் வன்முறைக்கு தூண்டும் விதமாக பேசி அவரை தாக்கியுள்ளார். 


இதையடுத்து, இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடிய அபாயத்தை உணர்ந்து தமிழக அரசும், காவல்துறையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


மேலும், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இத்தகைய படங்களை தவிர்த்தாக வேண்டும் என்றும்,  இல்லையேல் தமிழ்நாடு ஒரு கலவர பூமியாக மாறுவதற்கு இதுபோன்ற படங்களே ஒரு காரணமாக மாறும் என்றும்  கருத்து தெரிவித்து வருகின்றனர். 


சையத் யூனுஸ் காவல்துறையில் கொடுத்த புகார் : 


சென்னை புளியந்தோப்பு ஹை ரோடு பகுதியில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் சையத் யூனுஸ் என்னும் நான், நோன்பு துறந்து டீ குடிப்பதற்காக வந்தேன். அப்பொழுது அங்கு இருந்த வினோத் என்ற நபர், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் வரும் தீவிரவாதிகள் போன்று நீ இருக்கிறாய் என்று என்னை சுட்டிக்காட்டினார். அதுமட்டும் இல்லாமல் என்னை கடுமையாகவும் தாக்கியும், ஆபாசமாகவும் பேசினார். தொடர்ந்து, மதகலவரத்தை தூண்டும் விதமாக பேசினார். எனவே, வினோத் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தாக்கும் வீடியோ காட்சி : 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண