இசை உலகின் ஜாம்பவான், இசைஞானி , மாஸ்ட்ரோ என கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. மூன்று தலைமுறை கடந்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இளையராஜா, ரசிகர்களுக்காக லைவ் இசை விருந்து படைத்து வந்தார். 






இந்தநிலையில், சென்னையில் உள்ள சிக்னல்களில் தற்போது இசைஞானி இளையராஜாவின் இசை ஒலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள ரிப்பன் பில்டிங் அருகில் பெரியமேடு போக்குவரத்து காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் போக்குவரத்து வழிமுறைகளை அறிவித்து வருகின்றனர். அதோடு, இசைஞானி இளையராஜாவின் இசையையும் ஒலிக்க செய்கின்றனர். 


இது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, உற்சாகத்தையும் தருகிறது. காலை மற்றும் மாலை போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில் சுமார் 4 மணிநேரம் இளையராஜாவின் இசையே ஒலிக்க செய்கின்றனர். இதையடுத்து, இசையுடன் போக்குவரத்து வழிமுறைகளையும் ஒலிக்க செய்வதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் விதிமுறைகளை கடைபிடித்து வருவதாகவும் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 


குழந்தைகளுக்கும் காதலன் இளையராஜா :  


இளையராஜாவின் இசை பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளையும் எளிதில் கவரும். உதாரணமாக விவரம் தெரியாத 7 மாத குழந்தை கூட விடாமல் அழுதால், இளையராஜாவின் இசை அங்கும் அழுகையை அடக்கும். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், உலகமே இயங்காமல் போனாலும் இளையராஜாவின் லட்சக்கணக்கான பாடல்கள் புது பாதையை அமைக்கத்தான் செய்யும். 






அப்படிப்பட்ட இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் புது உலகத்தை படைக்கும் வல்லமை பெற்றது. இன்று பல இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா தான் ஆசான் என்றால் அது பொய்யாகாது. பல இசையமைப்பாளர்களின் இசையில் ஏதோ ஒரு துனுக்குகளில் இவரது இசை சிறிதேனும் கலந்திருக்கும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண