சென்னையிலிருந்து ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை தொடர்பான, முக்கிய திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மத்திய ரயில்வே துறை சமர்ப்பித்துள்ளது. திருப்பதி வழியாக இந்த ரயில் சேவை அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புல்லட் ரயில்
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் தற்போது மும்பை - அகமதாபாத் இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்ற வருகின்றன. இந்த ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவைப் போன்று தென்னிந்தியாவிலும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது.
சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் Chennai to Hyderabad bullet train
சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு 778 கிலோமீட்டர் தூரத்திற்கு, முக்கிய இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் வழித்தடம் அமைக்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே இறுதி வழித்தட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கு தேவையான நிலங்கள் குறித்து சர்வே தொடரவும் தமிழக அரசிடம் மத்திய அரசு அனுமதி கேட்டுள்ளது. இந்த ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டால் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு செல்ல தற்போது 12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது, இது வெகுவாக குறைந்து சுமார் 2:30 மணி நேரத்திற்குள் ஹைதராபாத் சென்றடைய முடியும்.
சவால்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டில் இந்த ரயில் வழித்தடம் சுமார் 61 கிலோமீட்டர் அமைய உள்ளது. இதில் கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் தூரத்திற்கு, சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய சூழல் உள்ளது. சுமார் இந்த ரயில் வழித்தடம் அமைப்பதற்காக 223 ஹிட்டர் நிலம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் வழித்தடம் செல்லும் வழியில் 65 சாலைகளும், 21 உயர் மின்னழுத்தம் மின்சார அமைப்புகளையும் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடம் என்ன? Hyderabad Chennai bullet train route map ?
இந்த புல்லட் ரயில் சென்னையிலிருந்து தொடங்கி (சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் ஒரு ரயில் நிலையம் அமையும்), ஸ்ரீ சிட்டி, நாயுடுபெட்டா, நெல்லூர், திருப்பதி, ஓங்கோல், சிராலா, அமராவதி, நந்திகாமா, கோடாட், சூர்யாபேட்டை, நல்கொண்டா, ஷம்ஷாபாத் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.