சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரிய கோரிய மனுவிற்கு தமிழக காவல்துறை பதிலளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்த போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் எடை குறைந்து பேச முடியாது நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே முருகனுக்கு  உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி வேலூர் சிறைத்துறையிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

 

எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க  தமிழக அரசு, சிறைத்துறை டி,ஜி,பி., ஐ,ஜி.,  மற்றும் வேலூர் சிறைத்துறை எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.  இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து பத்மாவின் மனுவுக்கு இரண்டு வாரங்களின் பதிலளிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.


மற்றொரு வழக்கு

 

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தொழிலதிபருமான ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



 

மறைந்த தொழிலதிபர் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் தத்தெடுத்த ஐயப்பன் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர்.ஏ.சி முத்தையா கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த மனுவில்,  தனது தந்தை எம்.ஏ.சிதம்பரத்தின் சகோதரான எம்.ஏ.எம்.ராமசாமி ஐயபப்னை  தத்து எடுத்துக் கொண்டதாகவும் , இது நகரத்தார் சமூகத்தின் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

 

ஐயப்பனை தத்தெடுத்ததை  ரத்து செய்த எம்.ஏ.எம்.ராமசாமி,  தனது  சொத்துக்களை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்தாகவும், மயிலாப்பூர் தாசில்தார் முன்   வாரிசு சான்றிதழ்  கேட்டு ஐயப்பன்  விண்ணப்பித்தபோது தானும் டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோர் சார்பகாவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது எதிர்ப்பையும் மீறி அவருக்கு மயிலாப்பூர் தாசில்தார் வழங்கிய வாரிசு சான்றிதழை  ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், வளர்ப்பு மகனான ஐயப்பன் சார்பில்  வாரிசு சான்றிதழ் கேட்டு  உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு உள்ளதா என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதில் ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா சார்பில் அவர்கள் நேரில் ஆஜராகமல் அவரது வழக்கறிஞர் மூலமே எதிர்ப்பு தெரிவித்து  மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். எதிர்ப்பு மனுவில் தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமாமி ரத்து செய்து விட்டதாக தெரிவித்தாலும் அதற்கான எழுத்துப்பூர்வர்மான ஆணவத்தை தாக்கல் செய்யவில்லை என்றும், அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரீசிலித்தே வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு  நீதிபதி சதீஷ்குமார் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தபோது,  வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் எந்த தகுதியும் இல்லை என்றும் தாசில்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ கொடுத்ததது சரிதான் என தீர்ப்பளித்துள்ளார்.