அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 




 

எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



 

இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது ஃபோர்டு நிறுவனமறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில், ECOSPORTS, எண்டவர்'. 'ஃபிகோ' மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

 

இதுவரை பெற்ற ஆர்டர்களில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால், வருகின்ற மார்ச் மாதம் வரை மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி செய்வதற்கு தாமதமானால் தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதையடுத்து, தங்கள் பங்குளை விற்பனை செய்து ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக தருவதாக அறிவித்திருந்தது.  



 

இந்நிலையில் குஜராத்தில் உள்ள போர்டு தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் , தயாரிப்பதற்காக டாட்டா நிறுவனத்துடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தொழிற்சாலையிலும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக அரசு பரிசீலனைக் மேற்கொண்டு வருவதாகவும், இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

 



 

ஆனால் இதுகுறித்து தொழிற்சாலை தொழிற்சங்க ஊழியர்களிடம் எந்தவித விபரமும் தெரிவிக்காமல், செட்டில்மெண்ட் ( வைப்புத்தொகை ) குறித்து பேச முன்வருமாறு தொழிற்சாலை நிர்வாகம் அறிவுறுத்தியது. தங்களுக்கு பணத்தைவிட தங்கள் வேலையை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறி  ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க ஊழியர்கள் இன்று காலையும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் போர்டு தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து தொழிற்சங்கதிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முழுமையாக தொழிற்சாலை மூடுவதாக கூறியுள்ளனர். இது குறித்து  விளக்கம் கேட்டபோது, முன்வைத்த காலை நிர்வாகம் பின் வைக்காதே எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.  தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் தகவல்கள் வெளியானது. இது குறித்து விளக்கம் கேட்டபோது அதை ஏப்ரல் 5ஆம் தேதி தருவதாக கூறினார்கள். அதனை அடுத்து மீண்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி தருவதாக, மீண்டும் காலம் தாழ்த்தி, மே 5ஆம் தேதி தருவதாக கூறினார்கள். ஆனால் நேற்று கேட்ட பொழுது மீண்டும் ஜூன் 11ஆம் தேதி தருவதாக கூறியதால், ஊழியர்கள் அனைவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்பொழுது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.