சென்னை மற்றும் சென்னை புறநகர் மக்களின் முக்கிய ரயில் சேவையாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. சென்னை கடற்கரை வரை பல்வேறு மார்க்கத்திலிருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவது, வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னை கடற்கரை பணிமனையில், புதிய நடை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன 

புதிய நடை மேம்பாலம் கட்டும் பணி 

சென்னை கடற்கரை பணிமனையில் புதிய நடை மேம்பாலம் கட்டும் பணி இன்று இரவு தொடங்கி, நாளை காலை 8 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி தளத்தில் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வேளச்சேரி - சென்னை கடற்கரை இன்று ரத்தாகும் ரயில்கள் விவரம் 

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 9 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 9:40 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10:20 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை - கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 10:20 மணிக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

நாளை ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் 

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 5 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 5:30 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 6 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 6:30 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 7:05 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 7:25 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 7:45 மணிக்கு செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 5:00 மணிக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 5:30 மணிக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 6 மணிக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 6:15 மணிக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 6:35 மணிக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு 6:55 மணிக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை - ஆவடி ரயில் சேவை 

சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு செல்லும் 4:05 ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று சென்னை கடற்கரையிலிருந்து திருவள்ளூருக்கு செல்லும் 5:10,5:40,6:10 ஆகிய நேரங்களில் செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.