நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். குறைந்தது 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வாய்ப்பிருபதாக கணிக்கப்படுகிறது. 


சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு இடையிலான சாலையில் ஏற்படும் நெரிசல் காரணமாக சொந்த ஊர்களுக்கும் திரும்பும் மக்கள் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். இயல்பாகவே, இந்த சாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து வரும் நிலையில் தற்போது தீபாவளி சிறப்பு பேருந்துகள் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 






சென்னை தாம்பரம் - திண்டிவனம் 4 வழிச்சாலை கடந்த 2005-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதே, இந்த சாலையை 6 வழிச்சாலையாகவும், பின்னர் 8 வழிச்சாலையாகவும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போது இருந்து எழுந்து வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டில் தாம்பரம்- திண்டிவனம் சாலையை 8 வழிச்சாலையாகவும், 6 வழி பறக்கும் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியது.






முன்னதாக, இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், " ஒப்பந்த புள்ளிகளை கோறும் பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கப்படும். அடுத்தட ஓராண்டுக்குள்  தாம்பரம்- திண்டிவனம் சாலையை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்" என்று தெரிவித்தார். 


சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் வேகமாக நகரமயமாகி வருவதால், தாம்பரம்- திண்டிவனம் சாலையை 8 வழிச்சாலையாக விரிவாக்குவது தவிர்க்க முடியாதாகி விட்டது.       


தீபாவளி பேருந்துகள் இயக்கம்: 


சென்னையில் இருந்து 3-ம் தேதி வரை தினமும் இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 9,806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6,734 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் . மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.  


பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் வகையில் நவ.5 முதல் 8-ம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்பு பேருந்துகள், பிறஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 17,719 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் கூறினார்.