தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்தில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளது. எந்தெந்த தொகுதிகளுக்கு எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள்? விவி பேட் இயந்திரங்கள்? என்பதை கீழே காணலாம்.

     சட்டமன்ற தொகுதிவாக்குப்பதிவு இயந்திரங்கள்கட்டுப்பாட்டு கருவிகள்விவி பேட் இயந்திரங்கள்
ஆர்.கே.நகர்295295319
பெரம்பூர்357357387
கொளத்தூர்343343371
வில்லிவாக்கம்306306331
திரு.வி.க.நகர்267267289
எழும்பூர்240240260
ராயபுரம்232232252
துறைமுகம்230230249
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி282282305
ஆயிரம் விளக்கு296296321
அண்ணாநகர்327327354
விருகம்பாக்கம்373373404
சைதாப்பேட்டை338338366
தியாகராய நகர்301301326
மயிலாப்பூர்326326353
வேளச்சேரி376376408
மொத்தம்488948895295

சென்னையில் உள்ள மொத்தம் 16 தொகுதிகளுக்கு மொத்தமாக 4 ஆயிரத்து 889 வாக்கு இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. சென்னையிலே வாக்காளர்கள் 2வது அதிகம் உள்ள வேளச்சேரி தொகுதியில் 376 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படு உள்ளது. வேட்பாளர்கள் அதிகம் உள்ள பெரம்பூர் தொகுதியில் 357 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 343 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அங்கு 387 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

28 லட்சம் வாக்காளர்கள்:

சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வரை வாழ்ந்தாலும் இங்கு வாக்காளர்கள் 28 லட்சம் பேர் உள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பெரும்பாலும் வசித்து வருகின்றனர். சென்னையில் பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. 

சென்னையில் வாக்குப்பதிவிற்கு பிறகு வாக்கு இயந்திரங்களை வைக்க உள்ள வாக்கு எண்ணும் மையங்களையும் தயார் செய்யும் பணியிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. சென்னை மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் போதுமான வாக்கு இயந்திரங்களை அனுப்புவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

பணிகள் தீவிரம்:

மேலும், வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி வழங்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்கு இயந்திரங்கள் வாக்குப்பதிவின்போது எந்த வித இயந்திரக் கோளாறுக்கு ஆளாத வகையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திமுக-வின் கோட்டையாக திகழ்ந்து வரும் சூழலில் இந்த தேர்தலில் அவர்களுக்கு கடும் சவால் அளிக்க அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக களத்தில் இறங்கியுள்ளது.