பயிற்சி மையத்தில் பாலியல் தொல்லை
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பெங்களூரில் சட்டப் படிப்பு முடித்து , உரிமையியல் நீதிபதி தேர்வுக்காக 2025 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வேளச்சேரி பகுதியில் தனியார் சட்ட பயிற்சி மையத்தில் சேர்ந்து, மகளிர் விடுதியில் தங்கி வந்தார். பயிற்சி மையத்தின் நிறுவனரான சந்திரசேகரன் என்பவர் பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து அப்பெண் பயிற்சி மையத்தின் செக்ரட்டரி மாயா என்பவரிடம் தெரிவித்த போது., எவ்விதத்திலும் உதவிடவில்லை என்று கூறி , மேற்படி பெண் அங்கு பயிலும் பெண் தோழிகளிடம் கூறிய போது , சந்திரசேகரன் அவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்ததின் பேரில் , மேற்படி பெண் பயிற்சி மையத்தில் படிப்பை நிறுத்திக் கொள்வதாக கூறி தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்ட போது , நிறுவுனர் சந்திரசேகரன் பணத்தை தர முடியாது எனக் கூறி மிரட்டியதாக , பாதிக்கப்பட்ட பெண் J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து., இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பயிற்சி மையத்தின் நிறுவனர் சந்திரசேகரன் ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி சந்திரசேகரன் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
திரைப்பட பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமி..
தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பல்வேறு ஏ.டி.எம்களில் பணம் கொள்ளை போவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தீவிர விசாரணையில் வட மாநில இளைஞர் ஒருவர் நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அதன் அடிப்படையில் பணம் வெளியில் வரும் இடத்தில் தகடு ஒன்றை வைத்து விட்டு சென்று விடுகிறார்.
பின்பு ஏ.டி.எம் கார்டை பயன்படுத்துகின்ற மக்கள் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் ஆனால் பணம் மட்டும் வெளியில் வருவதில்லை. அவர்கள் பண வரவில்லை என்று வீட்டிற்கு சென்று விடுவார்கள். பின்பு ஏ.டி.எம் க்கு சென்று அந்த மர்ம ஆசாமி தகடு எடுத்ததும் பணம் ஏடிஎம் மில் இருந்து வெளியில் வரும் அதை எடுத்து விட்டு மீண்டும் தகடை ஏடிஎம்மில் பொருத்தி விட்டு சென்று விடுகிறார். இவ்வாறு பல மாதங்களாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர் புகாரை அடுத்து ஏடிஎம்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் வடமாநில இளைஞரின் கைவரிசை தெரிய வந்தது.
மேலும் வட மாநில இளைஞர் நூதன முறையில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 30 - க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் இதுவரை தனது கை வரிசையை காட்டி உள்ளார்.
மேலும் சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம் , மணலி , மாதவரம் பால் பண்ணை , செங்குன்றம் மற்றும் மாங்காடு மதுரவாயல் , பாண்டிச்சேரி , மதுரை , திருச்சி , கோயம்புத்தூர் , கும்பகோணம் போன்ற பகுதிகளில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது பொது மக்களின் உதவிக்காகமர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன.