இரண்டாவது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை, ஆவடி அடுத்த அமைந்துள்ளது திருமுல்லைவாயல். இந்த பகுதியசை் சேர்ந்தவர் விஷ்ணு. அவருக்கு வயது 30. விஷ்ணு வீடு, வீடாகச் சென்று பால் பாக்கெட் போட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி இவரது மனைவி இவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், இவர் 26 வயதான இளம்பெண்ணை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  அந்த இளம்பெண் வடபழனியில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.





இந்த நிலையில், தனது மனைவியின் நடத்தை மீது விஷ்ணுவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. விஷ்ணுவின் சந்தேகத்தால் ஏற்பட்ட தொல்லை தாங்க முடியாத அவரது மனைவி விஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்தே தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார்.


முதல் மனைவியை பிரிந்த நிலையில், இரண்டாவது மனைவியும் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் விஷ்ணுவிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது 2வது மனைவி வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தான் கொண்டு சென்றிருந்த பெட்ரோல் குண்டை அலுவலகத்திற்கு முன்பு வீசியுள்ளார். மேலும், அதை வீடியோவாக எடுத்து தனது மனைவிக்கு அனுப்பி அவரை மிரட்டியுள்ளார்.




விஷ்ணு பெட்ரோல் குண்டு வீசியபோது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியை மிரட்டுவதற்காக மனைவியின் அலுவலகத்திற்கு சென்று கணவனே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : இன்ஸ்டா காதலியின் முன்னாள் காதலனை கடத்திச் சென்று போதை கும்பலுடன் தாக்கிய வாலிபர் கைது!


மேலும் படிக்க : ரம்ஜான் விருந்துக்கு சென்ற இடத்தில் தங்க நகை திருட்டு..! பிரியாணியுடன் விழுங்கிய வாலிபர்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண