சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை ஆகியோரின் எண்ணிக்கை சென்னை மாநகராட்சி தினசரி வெளியிட்டு வருகிறது. மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 659 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த மண்டலத்தில் 248 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 56 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 851 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மணலியில் 76 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 46 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.




மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 858 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 66 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 844 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 123  பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 281 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 589 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 98 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 523 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 833  நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 159 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 94 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 658 பேர் அங்கு உயிரிழந்துள்ள சூழலில், 101 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 708 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள சூழலில், 955 பேர் உயிரிழந்துள்ளனர். 158 பேர் அந்த மண்டலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 882 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 948 பேர் அங்கு உயிரிழந்துள்ள சூழலில், 175 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.




கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 686 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 931 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 43 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 451 நபர்கள் அங்கு உயிரிழந்துள்ள சூழலில், 103 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 178 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 367 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 87 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 38 நபர்கள் குணம் அடைந்துள்ள நிலையில், 662 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 990 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 337 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 100 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 128 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 135 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். தற்போது 51 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.