இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 659 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மண்டலத்தில் 248 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 65 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலியில் 7 ஆயிரத்து 854 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மணலி மண்டத்தில் தற்போது 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 860 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 70 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 856 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 123 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 283 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 589 நபர்கள் ராயபுரம் மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 108 நபர்கள் அந்த மண்டலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 537 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 157 பேர் அந்த மண்டலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், 835 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 106 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 658 நபர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 731 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 955 நபர்கள் அண்ணாநகர் மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 146 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 903 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 949 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 171 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 699 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 931 நபர்கள் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 136 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 50 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 452 நபர்கள் உயிரிழந்துளள சூழலில், 110 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 189 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 367 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 79 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருங்குடி மண்டலத்தில் 25 ஆயிரத்து 3 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 339 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 96 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 129 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 135 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 50 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துவதைப்போல மாஸ்க் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்காதீர்கள். சமூக விலகலைக் கடைபிடியுங்கள். கொரோனா தொற்றில் இருந்து உங்களையும், பிறரையும் காத்துக்கொள்ளுங்கள்