சென்னை காசிமேடு பகுதியில் மீன் பிடி துறைமுகத்தில் பைப் லைன்லில் இருந்து விரிசல் ஏற்பட்டு சமையல் எண்ணெய் குளம்(குழம்பு)போல் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. 


சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் சமையல் எண்ணெய் வந்துள்ளது. அந்த சமையல் எண்ணெய் பைப் லைன் மூலமாக திருவொற்றியூரில் உள்ள தனியார் எண்ணெய் கம்பெனியில் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அந்த பைப் லைன் திடீரென்று பழுது அடைந்து விட்டதால் எண்ணெய் கசிவு பைப்லைன் மூலமாக ஏற்பட்டு கசிய தொடங்கியுள்ளது. இதையடுத்து, காசிமேடு பகுதி முழுவதும் சமையல் எண்ணெய் குளம் போல் தேங்கி சுமார் 50 லிட்டருக்கும் அதிகமான எண்ணெய் வெளியேறியுள்ளது. 


இந்த சூழலில், விடியற்காலையில் மீனவர்கள் வேலைக்கு வந்துள்ளார்கள். அதை பார்த்து அதிர்ந்து போன மீனவர்கள் காவல் நிலையத்துக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர் பின்பு அங்க வந்த  எண்ணெய் நிறுவன ஊழியர்களும் பார்வையிட்டு, அந்த எண்ணையை அப்புறப்படுத்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டனர்.


அங்கு வந்த ஊழியர்கள் லாரி மூலமாக சமையல் எண்ணெயை அப்புறப்படுத்தும் பணியில் வருகின்றனர். ஆனால், இன்னும் பழுதடைந்த பைப் லைன் சரி செய்யப்படவில்லை. இந்த சமையல் எண்ணெய் கடலில் கலப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இந்த எண்ணெயால் மீன்களும் பாதிக்கப்படுகின்றன என அங்கு உள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்வு இதே பகுதியில் நடைபெற்றுள்ள நிலையில் பழுதடைந்த பைப் லைன்களை புதியதாக மாற்றி அமைக்காமல் பழைய பைப்லைன் மட்டுமே பயன்படுத்தி வருவதால் இது போன்ற நிகழ்வு நடந்திருப்பதாகவும் மீனவர்களுக்கு நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எண்ணெய் நிறுவனங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனால் தீ விபத்து அல்லது வேறு ஏதேனும் விபத்துக்கள் நடந்தால் சேதம் மீனவர்களுக்கு தான் என்றும் நிறுவனங்கள் இதை கருத்தில் கொண்டு பணிகளை துரிதப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் 


கப்பல் கட்டும் தளத்தில் சமையல் எண்ணெய் குளம் போல் தேங்கி இருக்கக்கூடிய காட்சி காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது