சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வாவை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் ஏற முயன்ற ஆண் நபரை கண்டித்ததால் ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 


இந்த தாக்குதலால் பாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வாவுக்கு நெஞ்சுப்பகுதி, கழுத்துப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குத்திவிட்டு தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.