இந்தியாவில் முதல் புல்லட் ட்ரெயின் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகிறது.
புல்லட் ரயில் திட்டம் - High Speed Corridor
தென்னிந்தியாவை பொருத்தவரை மிக முக்கிய நகரங்களாக சென்னை மற்றும் பெங்களூர் இருந்து வருகிறது. இந்த இரண்டு நகரங்களிலும், பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. இதனால் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களாக இருக்கக்கூடிய, சென்னை, பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில் திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து மைசூர் நகரம் 460 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்பு திட்டத்தை கையில் எடுத்த மத்திய அரசு
சென்னையில் இருந்து பெங்களூர் 330 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மைசூர் செல்ல 10 -11 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதேபோன்று பெங்களூர் செல்வதற்கு, 8 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது.
சென்னையில் இருந்து வந்தே பாரத், ரயில் மூலமாக செல்ல 6 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால், காத்திருப்பு நேரம் மற்றும் அதன் பயண செலவு அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சென்னை - பெங்களூர் - மைசூர் புல்லட் ரயில் திட்டத்தை தயார் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை இறங்கியுள்ளது.
சென்னை - பெங்களூர் - மைசூர் புல்லட் ரயில் திட்டம்: Chennai to Mysore Bullet Train project benefit
சுமார் 435 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த புல்லட் ரயில் திட்டம் அமைய உள்ளது. புல்லட் ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் தூரத்தில் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. தேவையான இடங்களில் பாலங்கள் மூலமாகவும், சுரங்கப்பாதை மூலமாகவும், ரயில் பாதை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 750 பயணிகள் பயணிக்கும் வகையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை, இணைக்கும் செயல் திட்டம்
சென்னை - பெங்களூர் - மைசூர் புல்லட் ரயில் பாதை
பெங்களூர் சென்னை விரைவு சாலையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, பரந்தூர் விமான நிலையம் அருகே இந்த வழித்தடம் அமைய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த வழிப்பாதை அமைய உள்ளது. கர்நாடகாவில் பெங்களூருக்கு அருகே உள்ள ஹோஸ்கோட்டே அருகே வழிப்பாதை அமைய உள்ளது.
ரயில் நிலையம் அமைக்க வாய்ப்பு உள்ள இடங்கள் ? Mysore Bangalore Chennai Bullet Train Stations
சென்னையில் தனது பயணத்தை தொடங்குகிறது. பூந்தமல்லி, அரக்கோணம், ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர், கர்நாடக மாநிலத்தில் பங்கார்பேட்டை, சென்னபட்டணம், மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. ஒன்பது இடங்களில் ரயில் நிறுத்தும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? Bullet Train Latest Update
இது தொடர்பாக RITES நிறுவனத்திடம் ஆய்வு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.