Crime : கண்ணில் பட்ட மக்களுக்கு அரிவாள் வெட்டு; நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கி ரவுடிகள் அட்டகாசம்..!
சென்னை ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை வெட்டியதாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Continues below advertisement

ரவுடிகள் அட்டகாசம்
சென்னை கிண்டி அருகே அமைந்துள்ளது ஆலந்தூர். சென்னையின் முக்கிய பகுதியான ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் திடீரென 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் ஒன்று சாலைகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றியது. அப்போது, அந்த கும்பல் சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது. மேலும், அந்த வழியாக சென்றவர்கள் மீது பட்டாக்கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியது.
Continues below advertisement
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மீது அந்த ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது. இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் நள்ளிரவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுதல் வேட்டையில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
Just In

8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! அரசு வேலை... மாதம் ₹15,000 சம்பளம்! முழு விவரம் இதோ!

Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!

Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.