இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் அங்கிருந்து ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, போன்ற பிற நாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு விரைவாக பயணம் செய்ய உதவி செய்யும் வண்ணம் தற்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 30 நிமிடங்களில் விரைவாக கொரோனா ரிசல்ட் சொல்லும் ஆர்டி-பிசிஆர் சோதனை மையம் கடந்த சில வாரங்களாக செயல்பாட்டில் இருந்து வருகிறது .



 

சில மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளையே வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளும் கேட்பதால், இந்த விரைவாக எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் மிக உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு சார்பில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்தது 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.



 

இந்நிலையில் விமான நிலையத்தில் வெரிஃபிகேஷன், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை எடுப்பது உள்ளிட்ட பணிகள் காரணமாக, நான்கு மணி நேரம் வரை எடுத்துக்கொள்வதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகள் 30 நிமிடத்தில் வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும்,  RAPID PCR டெஸ்ட் எடுக்க 4000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.



 

அதற்காக பணம் கட்டுவதற்கான, கவுன்டர்கள் மிகக் குறைவான அளவில் அமைக்கப்பட்டுள்ள காரணத்தினால், பணம் கட்டுவதற்கு 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை எடுத்துக் கொள்வதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை கொடுப்பதற்கு 30 நிமிடங்களும், கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு ஒரு மணி நேரம் வரை செலவானதாக, குற்றம்சாட்டியுள்ளனர்.



 

அதேபோல் சென்னை விமான நிலையத்தில் RAPID PCR டெஸ்ட் நான்காயிரம் ரூபாய் வசூலிப்பது மிக அதிகம் எனவும் கூறியுள்ளனர். எனவே டெஸ்ட் எதிர்ப்பதற்கான செலவை குறைக்க வேண்டும் என கோரிக்கை அமைத்துள்ளனர். கூடுதல் கவுன்டர்கள் அமைத்து, கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. வரிசையில் அதிக அளவு பயணிகள் நிற்கும் காரணத்தினால், சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து விமான நிலையம் நிர்வாகம்  உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.