சென்னையில் பலத்த மழையால் வானில் வட்டமடித்த 5 விமானங்கள் 

 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  சென்னை விமான நிலையத்தில் பலத்த மழை காரணமாக பயணிகள் வருவதும் வழியனுப்ப வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். 

 

டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம், அந்தமான் ஆகிய 4 விமானங்கள் பலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தறையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய  டெல்லி, ராஜமுந்திரி, சிலிகுரி, புனே, மும்பை உள்பட 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகளில் சற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

TN Rain Alert: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை.. தமிழ்நாட்டுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்.. எச்சரிக்கும் வானிலை மையம்!

 

நாளை தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


நாளை முதல் எங்கெல்லாம் மழை...? 



நாளை (04.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். அதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.



06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை,  தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.