விமான நிலையம் வந்த 2 மோப்ப நாய்கள்; சிக்கப்போகும் கடத்தல் ஆசாமிகள் - சிறப்பம்சங்கள் என்ன ?

புதிதாக வந்துள்ள இரு மோப்ப நாய்களும், போதைப் பொருள், வெடி மருந்து உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள், அரிய வகை வனவிலங்குகள் ஆகிய கடத்தல் பொருட்களை, கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் உடையவைகள்.

Continues below advertisement
சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவுக்கு, கூடுதலாக மேலும் 2 மோப்ப நாய்கள் வந்துள்ளன. இதை அடுத்து சுங்கத்துறை மோப்பநாய் பிரிவில், மோப்ப நாய்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
 
சென்னை விமான நிலையம் ( Chennai international airport )
 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் மோப்ப நாய் பிரிவில் ஏற்கனவே 3 மோப்ப நாய்கள் இருந்தன. அதில் போதைப் பொருளை கண்டுபிடிக்கும் நிபுணத்துவமாக செயல்பட்ட இராணி என்ற மோப்ப நாய், உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டது. அந்த இடத்தை நிரப்புவதற்கும், கூடுதலாக மோப்பநாய் பிரிவவை விரிவு படுத்துவதற்காகவும், புதிதாக இரண்டு மோப்ப நாய்களை வரவழைக்க, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
 
மோப்ப நாய்கள் பயிற்சி மையம் 
 
அதன்படி புதிதாக ஒரு வயதுடைய இரண்டு மோப்ப நாய்கள், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு வந்தன. அந்த இரண்டு மோப்ப நாய்களும் பஞ்சாப் மாநிலம், அட்டரியில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அந்த இரண்டு மோப்ப நாய்களும், 9 மாதங்கள் சிறப்பு பயிற்சிகள் பெற்றன. அந்தப் பயிற்சியை முடிவு செய்த அந்த இரண்டு மோப்ப நாய்களும், தற்போது சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவில், இரண்டு மோப்ப நாய்களில் இருந்து, நான்காக உயர்ந்துள்ளன.
 
போதை பொருட்கள் கடத்தல் 
 
இப்போது புதிதாக வந்துள்ள இரண்டு மோப்ப நாய்களில் ஒன்று, போதை பொருட்கள் கடத்தலை கண்டுபிடிப்பதில், அதிகம் நிபுணத்துவம் வாய்ந்தது. மற்றொரு மோப்ப நாய், சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சட்ட விரோதமாக கடத்தி வரப்படும், வன உயிரினங்கள் மற்றும் அபாயகரமான வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் போன்ற கடத்தல் பொருட்களை கண்டுபிடிக்கும் நிபுணத்துவம் வாய்ந்தது.

 
ஆசாமிகளை கவ்வி பிடித்து
 
இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் மோப்பநாய் பிரிவு, இனிமேல் மேலும் சிறப்பாக செயல்பட்டு, வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும், தங்கம், போதைப் பொருள், வெடி மருந்து உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்கள், அபூர்வ வகை வன உயிரினங்கள், மின்சாதனப் பொருட்கள், புகையிலை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்கள் போன்றவைகளை மோப்பம் பிடித்து, கடத்தல் ஆசாமிகளை கவ்வி பிடித்து, சுங்க  அதிகாரிகளிடம்  அடையாளம் காட்டி, பிடித்துக் கொடுத்து விடும் என்று சுங்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 
மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட விமானங்களில் மட்டுமே, போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. அதேபோல் ஒரு சில வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மட்டுமே, அபூர்வ வகை அரிய வனவிலங்குகள் கடத்தி வரப்படுகின்றன. இதனால் அதைப்போன்ற விமானங்கள் வரும்போது, சுங்கத்துறை அதிகாரிகள், இந்த மோப்ப நாய்களுடன் பயணிகள் வருகை பகுதிக்கு சென்று, கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக இனிமேல் ஈடுபடுவார்கள் என்றும் சுங்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Continues below advertisement
Sponsored Links by Taboola