சென்னையில் குட்கா விற்பனைக்குத் துணைபோன 15 காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் விற்பனைக்கு துணையாக இருந்ததாக ஏற்கனவே 22 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்கள் விபரம்,
1. கார்த்திக் : காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஓட்டேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்.
2. ஜானி செல்லப்பா : பெரியமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
3. தீபக் குமார் : வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்.
4. ராஜேஷ் : ராயபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
5. விஜயகாந்த் : புழல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்.
6. ரத்னகுமார் : திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்.
7. பிரியதர்ஷினி : சென்னை பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர்.
8. மாரியப்பன் : ராயபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
9. தவமணி : வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
10. ரவி : ஆர்கே நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
11. ரமேஷ் கண்ணன் : கோயம்பேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
12. சிவக்குமார் : மாதவரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
13. பூபதிராஜ் : விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
14. தேவராஜூ : கொத்தவால்சாவடி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
15. ராஜேஷ் : காசிமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்.
16. ஜானகிராமன் : புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தற்போது காத்திருப்போர் பட்டியல்...
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது, காவல் துறை வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை கிளப்பியுள்ளது.