செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது அதிலும் அவப்பொழுது தொடர்ந்து ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் தொடர் மழையானது பகல் நேரங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டன. ஆனால் கல்லூரிகள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். குறிப்பாக நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவ,மாணவிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கொடை இல்லாத மாணவிகள் மற்றும் மாணவர்கள் பலர் சாலைகளில் நனைந்தபடி சென்ற காட்சிகள் பார்க்க முடிந்தது. கல்லூரி மாணவர்கள் ஏராளமான கொடையை பிடித்தபடி, நனைந்தபடி சென்றனர். அதிக மழை பெய்யும் பொழுது பள்ளிகளுக்கு மழை விடுவதைப் போல் கல்லூரிகளுக்கும் மழை விட வேண்டும் என கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.




 வானிலை தகவல்


தமிழக பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,


03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.




04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.




06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,  தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.