தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : 


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


செங்கல்பட்டு  ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எட்டு மணி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 27.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழையால் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கீழ்க்கான உபரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தயார் நிலையில் உள்ள உபகரணங்கள்  மற்றும் ஊழியர்கள்  பட்டியல்


269 பவர் ஜெனரேட்டர்கள், 366 பவர் ரம்மங்கள் ,173 ஜேசிபி வாகனங்கள், 91 தண்ணீர் லாரிகள், இதுபோக 4518 மின்கம்பங்கள், 49 டிரான்ஸ்பார்மர்கள், 2046 மின் ஊழியர்கள் ,52 ஆம்புலன்ஸ்கள், 926 மருத்துவ மற்றும் மருத்துவ துணை ஊழியர்கள், 80 மீட்பு படகுகள், 60 தண்ணீரை வெளியேற்றும்  மோட்டார்கள், 1756 டார்ச் லைட்கள், உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன


இதுபோக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது இம்மு முகாம்களில் பொதுமக்களை பாதுகாக்க தங்க வைக்க தேவையான அனைத்து வசதிகளிலும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் மேலும் பொது மக்களிடம் வருகின்ற புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றை தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை சார்பில் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. எண் ( 1077, 044 -27427412044 -27427412, whatsapp Number :- 9444272345),  இவ்வாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மழையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.