செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள, அனுமந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தர்காஸ் வனப்பகுதியில் , ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. அனுமனின் காலடி தடம் பட்டதால் இந்த ஊருக்கு அனுமந்தபுரம் என பெயர் வந்ததாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். அப்பகுதியில் கோயில் சுமார் நூறாண்டுகளுக்கு மேலாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இஷ்ட தெய்வமாக இந்த கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் விளங்கி வருவதாகவும், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் ஆரத்தி செய்த பின்பு தான் சுப நிகழ்ச்சிகளை தொடங்குவதும் தங்களுடைய பணி எனவும் அப்பகுதி மக்கள்  தெரிவித்து வருகின்றனர். 







 

வனப்பகுதியில் இந்த கோயில் இருப்பதால், வனத்துறையின் அனுமதி இல்லாமல் இந்த கோவில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலுக்கு பூசாரியாக, தர்காஸ் பகுதியில் சேர்ந்த, எத்திராஜ் என்பவரின் மகன் பார்த்தசாரதி (41) இருந்து வருகிறார். அவ்வப்பொழுது இந்த கோயிலுக்கு ஊர் மக்கள் சார்பில் திருப்பணிகள் மேற்கொள்வது வழக்கம். அவர் மேற்கொள்ளும் பொழுது வனத்துறையினர் எந்த அனுமதியும் பெறுவதில்லை என்பது நீண்ட நாளாக குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அவ்வப்போது கிராம மக்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என கூறி வனத்துறை அலுவலர்கள் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால், பொதுமக்களை மிரட்டி லஞ்சம் பெற்று வந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக தர வேண்டும் என, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.  



 

இந்த நிலையில் கோவில் , பூசாரியாக பணியாற்றி வந்த பார்த்தசாரதி நேற்று காலை 5 மணியளவில் வனத்துறை அலுவலர்கள் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கி கைது செய்ததாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், திடீரென வனச்சரக அலுவலகத்தை கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு வனத்துறை சார்பில், அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்பட்ட வனத்திற்கு நுழைந்தது வனத்திற்கு சேதம் வெளியிட்டது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து செங்கல்பட்டு வன சரக அலுவலரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, ஏற்கனவே இந்த பகுதியில் அனுமதியில்லாமல் கட்டுமானம் கட்டப்பட்டது எனவும், இது குறித்து பலமுறை எச்சரிக்கை கொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

 







 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண