செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம், 43 தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி அறிவழகன் என்பவரை திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இதயவர்மன் பணி செய்யவிடாமல் தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் புகார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். இன்று திங்கட்கிழமை என்பதால், மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் புகார் மனுவை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், தண்டரை ஊராட்சி மன்ற பெண் தலைவரை அடிமைப்படுத்தும் விதமாக திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி செயல்படுவதாகவும், இருவரும் சேர்ந்து கொண்டு பெண் தலைவரை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு, தண்டரை ஊராட்சியில் ஏரி வேலையில் பணி தள பொறுப்பாளராக தண்டரை ஊராட்சி மன்ற தலைவரை மீறி தனக்கு ஆதரவாகனவர்களை வேளையில் அமர்த்தி செயல்பட முற்பட்ட பொழுது, தண்டரை ஊராட்சி மன்ற தலைவராகிய ஜெயலட்சுமி இதுகுறித்து திருப்போரூர் பெருந்தலைவரிடம் வேலை பிரச்சனை முறையிட்ட பொழுது தண்டரை ஊராட்சி மன்ற தலைவரை மீறி நான் தன்னிச்சையாக செயல்படுவேன் என்றும்,
என்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என்றும் தரை குறைவான வார்த்தைகள் உரிமையில் பேசி பெண் தலைவர் என்று பாராமல், " நீ பொம்பளையா இல்லன்னா நான் என்ன செய்வேன் என்று தெரியாது என்று கடுமையான கொச்சை வார்த்தைகளை சொல்லி மிரட்டி அலுவலகத்தை விட்டு விரட்டினார் " என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் புகார் மனுவில் என்னை பணி செய்யவிடாமல் தடுப்பது , தலைவர் கடமை செய்யாமல் தடையாக இருக்கின்ற திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் அவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி ஆகிய 20 மீது விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏபிபி நாடு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவியிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம். 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளரை மாற்ற வேண்டுமென கூறி ஊர் மக்களுடன் இணைந்து, ஊராட்சி மன்ற தலைவர் என்னை பார்க்க வந்தார் அதை தவிர வேறு எதுவும் நான் அவரிடம் பேசவில்லை, புகார் வந்ததாக தகவல் வந்திருக்கிறது ஆனால் அதை அவர்கள் நிரூபிக்கட்டும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்