செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழி நாடு பேரூராட்சி கூட்டத்தில் செயல் அலுவலரின் கன்னத்தில் தாக்கிய பேரூர் மன்ற துணைத் தலைவரும், முன்னாள் மாவட்ட பாமக செயலாளருமான கணபதியை காவல்துறையினர் கைது செய்தனர்
இடைக்கழி நாடு பேரூராட்சி - edaikazhinadu town panchayat
செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழி நாடு பேரூராட்சிக்கு வழக்கம் போல் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது அப்பொழுது 21 வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர். கூட்டத்திற்கு வருகை தந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கணபதி கூட்டத்திற்கு வந்தவுடன், எனக்கு தெரியாமல் வேலைக்கான டெண்டர் விடப்படுகிறது.
எனக்கு தெரியாமல் டெண்டர் எதுவும் விடக்கூடாது என சத்தம் போட்டு உள்ளார். தொடர்ந்து இடைக்கழி நாடு பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கவுன்சிலர்கள் யாரும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டாம் அனைவரும் வெளிநடப்பு செய்யலாம் என கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
செயல் அலுவலரை தாக்கிய பாமக பிரமுகர்
அப்பொழுது செயல் அலுவலர் மகேந்திரன் கூட்டத்திற்கு வந்து வருக பதிவேட்டில் கையெழுத்திடாதவர்கள், வெளியே சென்று விடலாம் என கூறினார். அவ்வாறு செயல் அலுவலர் மகேந்திரன் பேசியதால், ஆத்திரமடைந்த ஏழாவது வார்டு கவுன்சிலரும் முன்னாள் பாமக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கணபதி செயல் அலுவலர் மகேஸ்வரனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை தாக்கப்பட்டது, குறித்து செயல் அலுவலர் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் அடிப்படையில் அரசு பணி செய்யாமல் தடுப்பதும் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சூனாம்பேடு போலீசார் கணபதியை கைது செய்துள்ளனர். இடைக்கழி நாடு பேரூராட்சி துணைத்தலைவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்த உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வட்டாரங்களை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: இடைக்கழி நாடு பேரூராட்சியில் நடைபெற்ற சாதாரண கூட்டத்தில், செயல் அலுவலர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், துணைத் தலைவர் கணபதி செயல் அலுவலர் தாக்கியதாக புகார் தரப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கணபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே, இந்த சம்பவம் நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம், பாமகவினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.