தைப்பூச தெப்ப உற்சவ விழா

 

தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் 29 வது ஸ்தலமானதும், சைவ சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற மற்றும் புகழ் பெற்ற  திருத்தலமான இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூச தெப்ப உற்சவ விழாவிற்கு காலை மங்கல இசை உடன் விழா தொடங்கியது. அதன் பின்னர், ஸ்ரீ விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், முருகப்பெருமான் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

 



ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூச தெப்ப உற்சவ விழா

 

மாலை 5 மணிக்கு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றன. மாலை 7.00 மணிக்கு கோயிலின் வளாகத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியான ஸ்ரீ இளங்கிளி அம்மன் மற்றும் ஸ்ரீ ஆஞ்சீஸ்வரரும் திருக்கோயிலை வலம் வந்து கோயிலின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்த  குளத்தில் மின்விளக்குகலாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து கோயில் மூத்த சிவாச்சாரியார் சங்கர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்கள் ஒலிக்க சங்கொலி நாதம் எழுப்ப சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், பிரம்ம தீர்த்த குளத்தில் சுவாமியும், அம்பாளும்  தெப்பத்தில் மும்முறை வலம் வந்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம் (Thaipusam). தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருகபெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளில் பக்தர்கள் முருகபெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
  

 

தைப்பூசம்:

 

தை மாதம் 22ம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி காலை முதலே இந்த நட்சத்திரம் இருப்பதால் அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

 

தைப்பூச விரதம் (Thaipusam Fasting):

 

4-ம் தேதி மாலை தைப்பூச திருவிழா தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினம் பௌர்ணமி இல்லை. அடுத்தநாள் 5-ந் தேதிதான் பௌர்ணமி உள்ளது. அன்றைய தினம்தான் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. சிலர் திதியை வைத்து 4ஆம் தேதி என கூறுகின்றனர், ஒரு சிலர் நட்சத்திரம் வைத்து பிப்.5ஆம் தேதி என்கின்றனர்.



 

பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. இரவு முருகனுக்கு என்ன பலகாரம் அல்லது நெய்வேத்தியம் செய்யப்படுகிறதோ அதே நெய்வேத்தியத்தை நாமும் உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும்போது நடுவில் பசித்தால் முருகப்பெருமானுக்கு படைக்கின்ற பால் பழங்களை சாப்பிட்டுக்கொள்ளலாம்.