செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை அதன் நிறுவனரான வீரமணி என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில், தற்பொழுது பெண்கள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர் என 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.


இந்நிலையில் இந்த காப்பகத்தில் வசிக்கும் பெண் ஒருவரிடம் காப்பக நிர்வாகியான வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் whatsapp வாயிலாக புகார் ஒன்றில் பதிவு செய்தார். இந்த பதிவின் அடிப்படையில், தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை நடத்தி, அந்த புகாரில் உண்மை இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .


இதன் அடிப்படையில் நேற்று இரவு 12 மணி அளவில் வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும், காப்பகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு இருந்தவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மனவளர்ச்சி குன்றிய பெண்களிடம் காப்பக நிர்வாகி வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் வீரமணியை, இன்று காலை 8 மணியளவில் காப்பகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, காப்பக நிர்வாகி வீரமணியை போலீசார் கைது செய்தனர்.


இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோரை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்ய ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 37 பேரை வேறு காப்பகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே காப்பகத்தை செங்கல்பட்டு எஸ்பி சாய் பிரனீத், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டனர். காப்பகத்திற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது, பெண்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா ? மனவளர்ச்சி குன்றியோரை கவனிக்க உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து, விசாரணை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். தற்போது இந்த காப்பகம் அரசு புறம்போக்கு நிலத்தில், செயல்பட்டு வருவதால் காப்பகத்திற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண