கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து ரூ.28 கோடி மதிப்புடைய, கொக்கையின் போதை பொருளை கடத்தி வந்த, ராஜஸ்தான் மாநில இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப் பொருளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை. இளைஞர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது.

 


 சென்னை விமான நிலையம்


 கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை விமான நிலையத்தில் போதை  பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளன.  குறிப்பாக சென்னை வழியாக குஜராத் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், போதை பொருட்கள்  கொண்டு செல்லப்படுகிறது. அதாவது வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து  சென்னையில் இருந்து வேறு மாநிலங்களுக்கு.   போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறது.  போதைப் பொருள் கடத்துவதை தடுப்பதற்காக தொடர்ந்து பல்வேறு வகையில்  விமான நிலைய அதிகாரிகள்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  இதனால் அவப்பொழுது சென்னை விமான நிலையத்தில் பல கோடி கணக்க ரூபாய்  மதிப்புள்ள போதை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு  ஒரே நபரிடம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்  கூட சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



மத்திய வருவாய் புலனாய்வுத் துறை


சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படை அதிகாரிகள் இன்று அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை  சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, இந்த விமானத்தில் தோகாவிலிருந்து வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயனியாக விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார். 

 

" ஹெராயின் போதை பொருள் "


 

மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் அவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து, தனி அறைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பயணி வைத்திருந்தது ஹெராயின் போதை பொருள் என்றும் முதலில் கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அந்த போதை பொருட்களை பரிசோதித்த போது, அது மிகவும் விலை உயர்ந்த கொக்கையின் போதைப் பொருள் என்று தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.28 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.  இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளைஞர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது.