சென்னையில் கட்டுமான திட்டங்களுக்கான அனுமதி இனி ஆன்லைன் மூலம் 60 நாட்களுக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை பெருநகரில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வளர்ச்சிப் பிரிவு, (Tamil Nadu housing and concrete growth division) சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Improvement Authority -சிஎம்டிஏ) மற்றும் (டிடிசிபி- Directorate of City and Nation Planning (DTCP) ஆகிய துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ‘கோ லைவ்’ (‘Go Live’)என்ற இணையதளத்தை தொடங்க இருக்கிறது.


தற்போது, புதிய கட்டுமான திட்டங்கள் மேற்கொள்வதற்கான நடைமுறைகளில் பல ஆன்லைனில் இருக்கிறது. எனினும், பல துறைகளின் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) பெறுதன் தேவை, அதிகாரிகளின் கள ஆய்வுகளால் ஏற்படும் தாமதம், மேலும், கட்டுமான திட்டங்களுக்குத் தேவையான ஒப்புதல் பெறுதல் போன்றவைகள் ஆஃப்லைனில், அதாவது, நேரில் செல்லும் நடைமுறை அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாக இருக்கிறது. கால தாமத்தை போக்கும் வகையில் இந்த நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வழியே மேற்கொள்ளப்படுவது சிறப்பான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.


டி.வி.எஸ். எமரால்டின் பொது மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆன்லைன் நடைமுறை பற்றி கூறுகையில், கட்டுமான திட்டங்களின்  வணிகங்கள் அனைத்தையும் ஒரே போர்ட்டலின் கீழ் கொண்டு வந்து, காலக்கெடுவைக் கொண்ட திட்டமாக மாற்றுவது இந்தத் துறையை பெரிதும் மேம்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும், இந்த முயற்சியை வரவேற்ற அவர், ஆன்லைன் மூலம் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையால் பலவித நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், 6 மாதகாலம் எடுக்கும் வேலைகள், 60 நாட்களுக்குள் முடிக்கப்படும்.


கோ ட்வேல் இணையதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து பேசிய சி.எம்.டி,ஏ.வின் செயலாலர் அன்ஷுல் மிஸ்ரா  (Anshul Mishra, member-secretary, CMDA), கோ ட்வெல் இணையதளத்திற்கான பணிகள் இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நடந்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அனுமதி வழங்கிவிட்டார். சி.எம்.டி.ஏ. வின் கட்டுமான திட்டங்களுக்காக அனுமதி வழங்கப்படும் இணையதளம் பரிசோதனை முறையில் இயங்கி வருகிறது. இதில் இருக்கும் சில பிரச்சனைகளை நீக்கிய பின்பு, கோ ட்வெல் இணையதளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுக செய்யப்படும்.’ என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண