பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய ஒருங்கிணைத்த வசதிகளை கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் (Mull Modal Facility Complex) ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அமைக்க அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
நவீனமாகும் பிராட்வே பேருந்து நிலையம்:
சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்கசாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான உபயோகத்திற்கு வந்தது. காலப்போக்கில் இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு சில்லறை கடைகள் அமைந்தன.
சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இடநெருக்கடியால் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002-ஆம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும். இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
உரிய வருவாயை வழங்கும் வகையில் அரசு ஆணை:
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் Multi Modal Facility Complex (MMFC) அமைப்பதற்கு ரூ.280.85 கோடி மதிப்பீட்டில் கொள்கை ரீதியிலான நிர்வாக அனுமதியை வழங்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண்.133, நாள் 14.09.2023இல் அரசு ஆணையிட்டது. இப்புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதாக சென்று வரும் வசதியுடன் இவ்வளாகம் கட்டப்பட வேண்டும் என்பதால் இவ்வொருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையத்தை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) கட்டி, பராமரித்து சென்னை மாநகராட்சிக்கு உரிய வருவாயை வழங்கும் வகையில் அரசு ஆணையிட்டது.
பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் இரயில்களில் பயணிப்பதற்கும், மெட்ரோ இரயிலில் எளிதில் பயணிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ள கோட்டை இரயில் நிலையம் மற்றும் குறளகம் ஆகியன அருகருகே அமைந்துள்ள நிலையில், இந்த வசதிகளின் பயன்கள் அனைத்தையும் சீரான மற்றும் எளிதான வகையில் (Seamless and Easy connectivity) பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகத்தை உருவாக்குவதென அரசு முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் மேலும் கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு (TNKVIB) மேலும் பயனுள்ளதாக அமையும் வகையிலும், பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான சற்று பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பேருந்து நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) ஆலோசனை வழங்கியது.
இதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம், சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் Multi Modal Facility Complex (MMFC) அமைக்க ரூ.822.70 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதியை வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இத்திட்டச் செயலாக்கம். இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள், 'சென்னை மெட்ரோ அசட் மேனேஜ்மெண்ட் லிமிடெட்' (CMAML) என்ற ஒரு புதிய சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) மூலம் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசு, பேருந்து நிலைய திட்டப் பகுதிக்கு பற்றாக்குறை நிதியாக (Viability Gap Fund) ரூ.200.84 கோடி வழங்கும். நடைபாதை மற்றும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்காக (Multi Modal Integration) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.11503 கோடியை பத்தாண்டுகளுக்கு பின்னர் திருப்பி செலுத்த தொடங்கத்தக்க வகையிலான (10 years Moratorkam) சலுகைக் கடனாக (Soft Loan) சென்னை பெருநகர வளர்ச்சி முகமை (CMDA) வழங்கும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.506.83 கோடியை காலம் சார்ந்த கடனாக (Term Loan) தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TURDCO) வழங்கும்.
இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம். 2 அடுக்கு பேஸ்மெண்ட் அடித்தளம். 2 அடுக்கு பேருந்து நிறுத்தம், 6 அடுக்கு வணிக பயன்பாடு என மொத்தம் 10 அடுக்குகளை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்த இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார். 1100 ஆகும் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமானது.
பல்வேறு நுழைவாயில்கள் வழியாக உள்நுழையும் வசதி:
பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எளிதான, சீரான அணுகும் வசதி - பல்வேறு நுழைவாயில்கள் வழியாக உள்நுழையும் வசதிகள் ஆட்டோ மற்றும் டாக்ஸிக்கான ஒருங்கிணைந்த (Para tramalt) சுமார் 470கார் 800 சக்கர வாகனங்களை நிறுத்தும் வாதி, மின்சார பேருத்துகளுக்கான மின்னேற்றம் செய்யும் (charging) வசதி, CMRL நுழைவாயில் உடன் இணைப்பு Mu Modalration) கோட்டை புறநகர ரெயில் நிலையத்துடன் இணைப்பு NSC போஸ் சாலையை கடப்பதற்கான இணைப்பு, குடிநீர் மற்றும் நவீன் கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.
இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருத்து நிலைய வசதியானது. பொதுமக்களுக்கு பெருமளவில் பயானிக்கும் வகையில் மேலும் எளிதான, நவீன வசதியை வழங்கும். சென்னை மாநகரின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களில் இத்திட்டமானது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்று நகராட்சி நிர்வாம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.