குரோம்பேட்டையில் காதலியை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்த காதலன். உல்லாசமாக இருக்க அறையெடுத்து தங்கிய போது காதலனுக்கு ஏற்கனவே அதிக பெண்களுடன் பழக்கம் இருப்பதை தட்டி கேட்டதால் கொலை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிக் (வயது20). பவுசியா (வயது20). இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா குரோம்பேட்டை  நீயூ காலணியில் உள்ள இமை மகளிர் தங்கும் விடுதியில் தங்கி  பாலாஜி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.

 

இந்தநிலையில் பவுசியா திடீரென மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்வில்லை எனக் கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து வந்த காதலன் ஆசிக் பவுசியாவை சந்தித்து பேசிவந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள  நீயூ குரோம் ரெசிடென்ஸியில் 2 வது மாடியில் 201- வது அறையில் தங்கியள்ளனர். இந்தநிலையில்  மாலை 4 மணி அளவில் காதலன் தனக்கும் காதலி பவுசிகாக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் காதலி பவுசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

 

இதனைப் பார்த்த பவுசியா உடன் படிக்கும் மாணவிகள் இது சம்பந்தமாக குரோம்பேட்டை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு  சென்று பார்த்த போது அங்கு மாணவி பவுசியா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.

 

அதனை தொடர்ந்து  பவுசியா  உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்து அங்கிருந்து தப்பி ஓடிய காதலன் ஆசிக்கை பல்லாவரம் அருகில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் காதலர்கள் இருவரும் 16 வயது இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த கேரளா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஏற்கனவே சிறை சென்றுள்ளான் ஆசிக் . 

 

இருவருக்கும்  பிறந்த குழந்தை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் சென்னையில் இருந்த தனது காதலியை பார்க்க வந்த பொழுது இந்த கொலை சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது காதலியை பார்க்க வந்து அறை எடுத்து தங்கிய பொழுது காதலனுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.