உலக எய்ட்ஸ் தினம் - 2025
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் - 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய மேயர் பிரியா ;
கடந்த காலங்களில் எச்.ஐ.வி குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அதனை பற்றி பேசலமா வேண்டாமா என அச்சபட்டனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் நபர்கள் இடம் பேச கூட முடியாத சூழல் இருந்தது. அது குறித்து புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா என விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அதன் மூலம் நிறைய விழிப்புணர்வு கிடைத்தது.
எச்.ஐ.வி குறித்து விழிப்புணர்வு இல்லாததால் எச்.ஐ.வி பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அவர்களது வீட்டுகளில் கூட தங்க முடியாத சூழல் இருந்தது. இந்த எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரிடம் பேசுவதால் அது பரவாது.
எச்.ஐ.வி பாதித்தவர்களின் ரத்தம் கலந்தால் தான் நமக்கு பரவும் அது குறித்தான விழிப்புணர்வு மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. எச்.ஐ.வி முறைகளுக்கும் அரசு பல்வேறு சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இது குறித்தான விழிப்புணர்வை அரசே ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது ;
எச்.ஐ.வி குறித்து மக்கள் இடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் டிசம்பர் 12 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எச்.ஐ.வியில் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி 0.23 சதவீதமாக உள்ளது. அதுவே தமிழ்நாட்டில் அதன் சராசரி 0.16 சதவிதமாக உள்ளது. இதனை 2030 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வரும் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
கருவுற்ற தாய்மார்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2600 மையங்கள் உள்ளது. 81 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்ளது. கலைஞர் அவர்கள் 2009 ஆம் ஆண்டு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழுந்தைகளுக்கு 5 கோடி ரூபாய் அளவில் வைப்பு நிதி அறக்கட்டளையை உருவாக்கினார். அந்த தொகை 2025 ஆம் ஆண்டு 25 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
எச்.ஐ.வி தொற்று கட்டுப்பாடு - தமிழகத்துக்கு பாராட்டு
தமிழக முதலமைச்சர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடந்த 6 மாதமாக ஊட்டசத்து மற்றும் கல்விக்காக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். இதில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 7618 குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
எச்.ஐ.வி குறித்து 584 கல்லூரிகளில் பயிலும் 14878 மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 02.10.2025 கிராம சபை கூட்டத்திலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்தான உறுதிமொழி எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்று கட்டுபடுத்தப்பட்டுள்ளது குறித்து தேசிய கட்டுப்பாட்டு நிறுவனம் தமிழகத்தை பாராட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் புதிய எச்.ஐ.வி நோய் பாதிப்பு இல்லாத மாநிலமாக வேண்டும் மேலும் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு சம வாய்ப்பும் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிக்க வேண்டும்.
மருத்துவமனை - உபகரணங்களில் தூய்மை
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டார மருத்துமனைகளில் பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் தூய்மை படுத்திய பிறகு தான் பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அது குறித்தான சுற்றறிக்கையை அனுப்பி அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
2030 ஆம் ஆண்டு எச்.ஐ.வி பாதிப்பு இலலாத மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்கிற வகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சிறிய விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் தமிழகத்தில் ரத்தத்தில் ஒவியம் வரைவது தெரிய வந்தது அதன் பிறகு அதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அது போன்று நடைபெறாமல் அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.