கந்தன் மலை திரைப்படம் வெளியீடு
வீரக்குமார் இயக்கத்தில் எச்.ராஜா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கந்தன் மலை படம் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் தாமரை என்கிற யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு டிரைலர் வெளியான போதே பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது.
இதில் , தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் பிரச்சினையாகவும் பேசும் பொருளாகவும் மாறி இருக்கும் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான காட்சிகளும், வசனமும் தான் இந்த படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்தது. அதனாலேயே இதை ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர். ஒரு சிலர் ட்ரைலரை பாராட்டி ஹெச். ராஜாவுக்கு வாழ்த்துக்களையும் கூறி இருந்தனர்.
சிலர் , இந்த திரைப்படம் குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு - வும் கருத்துகளை தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி ஏ சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அதன் பின்பு , சென்னை தீவுத்திடலில் கட்டப்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையத்தினையும் , சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில் ;
முதலமைச்சர் சுட்டி காட்டிய வழிகளின் படி வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூலகம், பூங்கா, படிப்பகம், மின்தூக்கி வசதிகளோடு 770 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உருவாக்கி கொண்டிருக்கிறது. ஜனவரி 20 - ஆம் தேதிக்குள் இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறும்.
எச். ராஜாவின் கந்தன்மலை படத்தில் அறநிலையத்துறையும் , சேகர்பாபுவையும் விமர்சனம் செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு.
வேறு ஏதாவது நல்ல கேள்வி கேளுங்கள். எடுத்த உடனேயே அந்த சாக்கடையை ஏன் கொண்டு வருகிறீர்கள். தியேட்டரில் வெளியிடுவதற்கு கூட தகுதி இல்லாத ஒரு படத்தில் நடித்த ,தகுதி இல்லாத ஒருவர் தான் நீங்கள் சொல்லும் அந்தப் பெயருக்கு உரியவர்
என் அருகில் நின்று கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ன மதம் என்று எனக்கு தெரியாது. கேள்வி கேட்கும் செய்தியாளர்களும் என்ன மதம் என்று எனக்கு தெரியாது. மதத்தால் இனத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் அந்த தீய சக்தியின் பணிகள் தமிழகத்தில் எடுபடாது
உதவாக்கரை ராஜா
நான்காயிரம் கோயில்களில் குடமுழக்கு காணப் போகிறது. 24 கோயில்கள் லிப்டிங் முறையில் தூக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்ற கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சியில் அறநிலையத் துறைக்கு செய்த சாதனைகள் எந்த ஆட்சியாளும் செய்ய முடியாது.
நாளொரு அற்புதங்கள் நிகழ்த்தி இறை அன்பர்களுக்கு மகிழ்ச்சியை தரும் இந்த ஆட்சியை உதவாக்கரை ராஜாக்களால் எதுவும் செய்ய முடியாது