உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் என்று அழைக்கப்படும் தி ஜெயன்ட் ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம் (A300-608ST) சென்னை விமான நிலையத்திற்கு பந்து எரிபொருள் நிரப்பி சென்றது.


சென்னை வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்..


ஏற்கெனவே, கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக இதே விமானம் சென்னை வந்திருந்தது. அப்போது அந்த விமானம் அபுதாபியில் இருந்து தாய்லாந்து செல்லும் வழியில் இங்கு நின்று சென்றது. அதுவே இந்த சரக்கு விமானம் சென்னையில் தரை இறங்கிய முதல் தருணம். தற்போது இரண்டாவது முறையாக ஒரு ஆண்டு கழித்து மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளது. இம்முறை இந்த விமானம் குஜராத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் வழியில் சென்னையில் எரிபொருள் நிரப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.



விமான பாகங்களை கொண்டு செல்ல தயாரிக்கப்பட்டது


சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்று அழைக்கப்படும் இந்த பெலுகா, இறக்கைகள், இயந்திர பாகங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சாதாரண விமானத்தில் வைக்க முடியாத பிற பெரிய சரக்குகள் உள்ளிட்ட விமானங்களின் பாகங்களை எடுத்துச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மதிப்பிடப்பட்ட தோராயமான விலை $284 மில்லியன் ஆகும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2,324 கோடி ரூபாய் ஆகும்.


தொடர்புடைய செய்திகள்: Finance Minister On Loan: கடனை திரும்பப் பெற மோசமாக நடந்து கொள்ளக் கூடாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை


பெலுகா விமானத்தின் கட்டமைப்பு


1,55,000 கிலோ எடையுள்ள இந்த பெலுகா விமானம் 56.15 மீ நீளம் இருக்கும். இதன் பக்கவாட்டில் உள்ள இறக்கைகள் 44.84 மீ நீளம் ஆகும். அதிக இடவசதி இருக்கும் வகையில் இதன் உடல் பாகம் திமிங்கல வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, ஏர்பஸ் மொத்தம் ஐந்து விமானங்களை மட்டுமே உருவாக்கியுள்ளது, மேலும் அதில் சென்னையில் தரையிறங்கிய  இந்த விமானம், இந்த சீரிஸில் இரண்டாவது இடத்தில் உள்ளது.



எவ்வளவு எடையை தூக்கிச்செல்லும்?


இந்த விமானத்தால் 47,000 கிலோ (47 டன்) சரக்குகளை எடுத்துச்செல்ல முடியும். இது இன்று பறக்கும் எந்தவொரு சிவில் அல்லது இராணுவ விமானத்தையும் விட மிகப் பெரிய அளவு என்று ஃபர்ஸ்ட் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது. பிரதான தளத்தின் நிலை சரக்குகளை மாற்றுவதற்கு எளிதாக ரோல்-ஆன் மற்றும் ரோல்-ஆஃப் ஆகிய செயல்பாட்டை செய்கிறது. ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி படி, இது ஒரு பெரிய ஒற்றை-துண்டு பிரதான சரக்கு கதவுடன் வருகிறது, இதனால் இதில் சரக்கு பெட்டிகளை நேராகவும், மேல்நோக்கியும் ஏற்ற முடியும். இந்த விமானம் 2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு ஒரு புதிய செயற்கைக்கோளை எடுத்துச் சென்றது. 2004-இல், இது யூடெல்சாட் W3A செயற்கைக்கோளை கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோம் ஏவுதளத்திற்கு கொண்டு சென்றது.


இது NASA X-33 வென்ச்சர் ஸ்டார் விண்கலத்திற்காக 3,500 கிலோ மற்றும் 9 மீட்டர் நீளம் கொண்ட அலுமினிய எரிபொருள் தொட்டி போன்ற பெரிய மற்றும் நுட்பமான விண்வெளி அமைப்புகளை எடுத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.