விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையனின் மகன்கள் மாதவன் (22), முரசொலி மாறன் (18). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்பட்டை சேர்ந்த ரவுடி டென் என்கிற பென்னரசன் (22) என்பவருடைய உறவுக்கார பெண்ணை மாதவன் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாதவனை தீர்த்துக்கட்ட பென்னரசன் முயற்சி செய்து உள்ளார்.



இந்த நிலையில் கண்டமங்கலம் அருகே பள்ளி புதுப்பட்டு பெரிய காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாதவன் வருவதை அறிந்த பென்னரசன் தனது நண்பர்களும், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடிகளான அகமது உசேன் (21), வினோத் என்கிற சிவா (19), அஜித்ராஜ் (20), செரிப் முகமது (21) ஆகியோருடன் நேற்று முன்தினம் அங்கு வந்தார். கோவில் திருவிழாவில் மாதவனை கண்டதும் அந்த கும்பல் துரத்திச் சென்று கத்தியால் அவரை வெட்ட முயன்றனர். ஆனால் அவர் அதில் இருந்து தப்பினார்.



இந்தநிலையில் மாதவனின் தம்பி முரசொலி மாறன் அவ்வழியாக நேற்று மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அந்த கும்பல் முரசொலி மாறனை துரத்திச் சென்று கத்தியால் வெட்ட முயன்றனர். தப்பி ஓட முயன்ற அவர் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் அந்த குண்டுகள் தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கோவில் திருவிழாவுக்கு வந்து இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்ததால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. 


மைசூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : கண்டனங்களால் ரூல்ஸை மாற்றிய பல்கலைக்கழகம்..!


அப்போது முரசொலி மாறன், பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதிக்கு சென்று தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார். இந்தநிலையில் பொதுமக்கள் அங்கு அதிகம் கூடியதால் கொலை செய்ய வந்த கும்பல் தப்பி ஓடியது.




இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் அந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அகமது உசேன், வினோத் என்கிற சிவா, அஜித்ராஜ், செரிப் முகமது, பென்னரசன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 


15 லட்சம் பேரை கொன்ற ஸ்டாலின் படத்தை, கம்யூனிஸ்டுகள் வழிபடுவதா? - காங்கிரஸ் எம்.எல்.ஏ