கட்டமைப்பு குறைபாடு காரணமாக ரயில்வே வாரிய தேர்வர்களுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன இந்த தேர்வர்கள் வசதிக்காக சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன அதன்படி மே 6 அன்று தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06005) மற்றும் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரயில் (12689) ஆகியவற்றில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது.
அதேபோல மறுமார்க்கத்தில் மே 8-ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06006) மற்றும் நாகர்கோவில் - டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் (12690) சென்னை சென்ட்ரல் ரயில் ஆகியவற்றிலும் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படுகிறது. மே 7 முதல் 10 வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மே 8 முதல் 11 வரை நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவற்றில் 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்படும்.
மே 6 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர ரயில் (16733) மற்றும் மே 10 அன்று ஓகாவில் இருந்து புறப்படும் ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் (16734) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
மே 8 அன்று மதுரையில் இருந்து புறப்படும் மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12651) மற்றும் மே 10 அன்று டெல்லியில் இருந்து புறப்படும் நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12652) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். மே 8 அன்று கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர விரைவு ரயில் (22668) மற்றும் மே 9 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர ரயில் (22667) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது - மன்னார்குடி ஜீயர்