சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் அரை நிர்வாண கோலத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய மாணவியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அவருடன் தங்கி இருந்த காதலனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ): வேலூரை சேர்ந்தவர் தேஜஸ்வினி (23). தேஜஸ்வினி தாய் மற்றும் தந்தை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் தேஜஸ்வினி பேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரில், தனது காதலன் அஸ்வின் என்பவர் உடன் லிவிங் டு கெதரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பாண்டிச்சேரியை சேர்ந்த அஸ்வின் மற்றும் தேஜஸ்வினி கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் பெருங்களத்தூரில் உள்ள பிரபலம் வாய்ந்த ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.


 

இந்நிலையில், தேஜஸ்வினி  கடந்த 18 ஆம் தேதி அரை நிர்வாண கோலத்தில் மர்மமான முறையில், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அப்பகுதி மக்கள், கூடுவாஞ்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேஜஸ்வினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றிய பொழுது அறையில் மது பாட்டில்கள், உயர்ரக சிகரெட்டுகள், கஞ்சா புகைப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை  கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த  கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய தேஜஸ்வினியின் காதலன் அஸ்வினை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆறு மாதமாக அஸ்வின் மற்றும் தேஜஸ்வினி இருவரும் லிவிங் டு கதரில் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இருவரும் பிரிந்துள்ளனர். தேஜஸ்வினிக்கு மதுப்பழக்கம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் தேஜஸ்வினி சந்தேகத்திற்கு உரிய முறையில், தூக்கில் தொங்கியிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ்வினி கைபேசியை கைப்பற்றிய, போலீசார் பாஸ்வேர்ட் இருந்ததால் அதை ஓபன் செய்ய முடியாமல், அதை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து, அதில் இருக்கும் தகவலை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காதலனிடம் கூடுவாஞ்சேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் காதல் தோல்வியால், இந்த தற்கொலை  நடைபெற்று இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக காதலனிடம் விசாரணை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.