" அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க் " அறிமுகம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உலக பக்கவாத தினமான இன்று , அப்போலோ மருத்துவமனைகள் பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் " அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க் " பக்கவாத நோய் பாதிப்பு குறித்து விரைவாக கண்டறியும் நவீன வசதி மற்றும் உரிய சிகிச்சையை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ நெறிமுறை அடிப்படையில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 4 நொடிக்கு ஒருவருக்கு பக்கவாதம்
இளைய தலைமுறையினரிடம் பக்கவாத பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4 பேரில் ஒருவர் பக்கவாத பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.3 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை பாதிப்படைகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு 4 நொடிக்கும் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாத பாதிப்பு உள்ளது.
அப்பல்லோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க் , இதில் சென்னையின் நரம்பியல் மற்றும் நியூரோவாஸ்குலர் சிகிச்சையில் முன்னணி வகிக்கும் பல்துறை மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் , நியூரோ எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் பரமசிவம், மருத்துவர்கள் கண்ணன், விஜய் சங்கர், முத்துகனி, அருள்செல்வன், சதீஷ்குமார், ஶ்ரீனிவாசன் மற்றும் மூத்த நரம்பியல் ஆலோசகர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் ஓ.எம்.ஆர் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சதிஷ் குமார் பேசும் போது ;
எவ்வளவு விரைவாக சிகிச்சையை அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக காலம் தாழ்த்தாமல் சிகிச்சையளிக்க வேண்டும். பக்கவாத பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்களின் நரம்புக்குள் இரத்த உறைவைக் கரைக்கும் த்ரோம்போலைசிஸ் சிகிச்சையை தொடங்க நமக்கு தற்போது 4.5 மணி நேரமே அங்கீகரிக்கப்பட்ட காலக் கெடுவாக உள்ளது. இருப்பினும் இயன்றவரை விரைவாக சிகிச்சையை தொடங்க வேண்டும்.
பக்க வாதம் அறிகுறிகள்
திடீரென நரம்பியல் கோளாறு ஏதேனும் தோன்றினால், அதை பக்க வாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகக் கருதப்பட வேண்டும். திடீர் பார்வை இழப்பு, முகம் கோணலாகும் தோற்றம், உடலின் ஒரு பக்கத்தில் கைகாலில் திடீர் பலவீனம் அல்லது உணர்வின்மை. சரளமாக பேசுவதில் வழக்கத்திற்கு மாறான தடங்கல்கள் மற்றும் உடல் இயக்கத்தில் சமநிலை இழப்பு ஆகியவை இந்த நோயைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வும், பக்கவாத நோய் மேலாண்மையில் நேரத்தின் முக்கியத்துவமும், தடுப்பு முறைகளும் நமது சமூகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளன. பக்கவாத சிகிச்சையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது.
வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் பேசும் போது ;
செயற்கை நுண்ணறிவு (AI) தீவிர பக்கவாத சிகிச்சையை நாம் அணுகும் விதத்தை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் மாற்றியமைத்து வருகிறது. பக்கவாத மேலாண்மையில் நேரம் மிக முக்கியமான காரணியாக இருப்பதால், செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இமேஜிங் மற்றும் துல்லியமான முடிவெடுக்க உதவும் ஆதரவுக் கருவிகள் (decision-support tools] பக்கவாத பாதிப்பை விரைவாக அடையாளம் காணவும், முன்பு இல்லாத துல்லியத்துடன் சிகிச்சையைத் தொடங்கவும் நமக்கு உதவுகின்றன என்றார்.