வாட்ஸ் அப் திட்டம் தொடக்கம்

Continues below advertisement

சென்னை மாநகராட்சி சொத்து வரியின், பிறப்பு , இறப்பு சான்றிதழ் , உள்ளிட்ட 32 வகையான சேவைகளை, 'வாட்ஸாப்' மூலமாக பெறும் வசதியை, மேயர் பிரியா துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் மக்களுக்கான சேவைகள், நம்ம சென்னை செயலி, https://chennaicorporation. gov.in/gcc/ என்ற இணைய தளம் மற்றும் '1913' என்ற அழைப்பு மையம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதன் முறையாக தொடக்கம்

Continues below advertisement

இதைத் தொடர்ந்து , தமிழகத்தில் முதன் முறையாக மாநகராட்சியின் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தையும், 'வாட்ஸாப்' மூலமாக பெறும் வசதியை, ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார்.

மாநகராட்சி சேவையை பெற , 94450 61913 என்ற எண்ணிற்கு, 'ஹாய் அல்லது வணக்கம் என , வாட்ஸாப்பில் பதிவிட வேண்டும். பின் மாநகராட்சி சேவைகளை, உரிய வழிகாட்டலுடன் உள்நுழைந்து பெறலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி செலுத்துதல், புகார் பதிவு, வர்த்தக உரிமம் செலுத்துதல், புதுப்பித்தல் உட்பட , 32 வகையான சேவைகளை மக்கள் பெற முடியும்.

அத்துடன், 'வாட்ஸாப் ஷாட்புட்' வாயிலாக, தமிழ் அலுவலகம், மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாட முடியும். மண்டல வார்டு அலுவலகம், மயான பூமி உள்ளிட்ட, அருகில் உள்ள வசதிகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். அடுத்தகட்டமாக. பொழுதுபோக்குவரி, சுகாதார சான்றிதழ் சேவைகள், சென்னை குடிநீர், கழிவு நீர் அகற்று வாரியம், பதிவுத்துறை ஆகியவற்றின் சேவைகளும் சேர்க்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

QR Code வசதி உருவாக்கம்

மாநகராட்சி மின் வாரியம் , குடிநீர் வாரியத்தின் அனைத்து அலுவலகங்கள், இ - சேவை மையங்கள் உள்ளிட்ட இடங்களில் , வரி செலுத்த வசதியாக , க்யூ.ஆர்., குறியீடு வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி கடைகளுக்கான வாடகை செலுத்த வசதியாக க்யூ.ஆர்., குறியீடு அச்சிட்ட அட்டைகளை மேயர் பிரியா வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் , துணை கமிஷனர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி , பிரதி விராஜ் , வருவாய் அலுவலர் பானு சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.