தமிழக வெற்றிக் கழகம்  என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அருகேயுள்ள வி.சாலை பகுதியில் இம்மாதம் 23-ந் தேதி நடத்த இருப்பதாக முடிவு செய்திருந்தனர். 


 


தமிழக வெற்றிக் கழகம் 


 


 


இம்மாநாட்டுக்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை நடைமுறைப் படுத்துவதில் குறிப்பிட்ட நாட்கள் தேவைப்படும் என்பதால், ஏற்கனவே முடிவு செய்த தேதியில் மாநாட்டை நடத்துவது சிரமம் என்பதால் தேதி தள்ளிப்போனது. தொடர்ந்து, மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்.


 


 


தமிழக வெற்றிக் கழகம் மாநாடு 


 


இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப்பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் அக்டோபர் 27-ந் தேதி நடத்தப்படும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த செய்தியை அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


 


 


ஏற்கனவே செப்டம்பர் 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்த நிலையில் தற்போது மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். அதற்கான ஏற்பாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ஓரிரு நாளில் காவல் துறையின் அனுமதி கேட்டு மனு கொடுக்க உள்ளனர்.


 


 


விஜய் உத்தரவா ?


 


 


இந்தநிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் கட்சி தொண்டர்கள் செய்ய வேண்டியவை என 10 கட்டளைகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. க்ஷ


 


 


1. கட்சித் தோழர்கள் மது அருந்திவிட்டு மாநாட்டு பகுதிக்கு வர வேண்டாம் 


2. இடத்தை மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் 


3. ரயில் தண்டவாளம் மற்றும் கிணறு போன்ற ஆபத்தான இடங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் 


4. சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது 


5. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் 


6. அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேவேண்டும்


7.மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு துறைக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.


8. வண்டியில் வேகமாகவும் அல்லது சாகசங்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது 


9. நான்கு சக்கர வாகனங்களில் வரும் தோழர்கள் தொங்கிக் கொண்டு வர வேண்டாம் 


10. பெரிய வாகனங்களில் வரும் தோழர்கள் முன்கூட்டியே வர திட்டமிடுங்கள். உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


 


இந்த பத்து அறிவுரைகள் அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அறிவுரைகளை மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் தங்களது whatsapp குழுவில் இந்த அறிவுரைகளை வைரலாக பரப்பி வருகின்றனர். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக கட்சி சார்பில் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தமிழகக் வெற்றி கழக நிர்வாகிகள் இந்த தகவலை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது .