அக்னிபத் திட்டத்தின் கீழ் சென்னை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க நாளை மறுநாள் (15.03.2023) கடைசி தேதி. விண்ணப்பிக்க விரும்புவர்கள் விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.

இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.   அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

 தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அழைப்பு விடப்பட்டுள்ளது.

பணி விவரம்: 

  • அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி 
  • அக்னிவீர் டெக்னிக்கல் 
  • அக்னிவீர் கிளார்க் / ஸ்டார் கீப்பர் டெக்னிக்கல்
  • அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 10-வது தேர்ச்சி பிரிவு
  • அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 8-வது தேர்ச்சி பிரிவு 

கல்வித் தகுதி: 

  • அக்னிவீர் ஜெனரல் ட்யூட்டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு. 45% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 
  • அக்னிவீர் டெக்னிக்கல் பணியிடத்திற்கு 10+2 என்ற கல்வி முறையில் தேர்ச்சி அல்லது 10- வது தேர்ச்சி 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • டிப்ளமோ எனில் மெக்கானிகள், எலக்ட்ரானிக்கல், ஃபிட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • அக்னிவீர் கிளார்க் / ஸ்டார் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு 60% மதிப்பெண்களோடு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற கல்வி முறையில் படித்திருக்க வேண்டும். 
  • அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் 33% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன் 8-வது பாஸ் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியோடு 33% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 17 -1/2 முதல் 21 வயது வரை இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

 

ஆண்டு ஊதியம் பிடித்தம் போக கைக்குக் கிடைப்பது  வீரர்களிடம் பிடித்தம் செய்வது அரசு செலுத்துவது
முதல் ஆண்டு - ரூ.30,000  ரூ.21,000 ரூ.9000 ரூ.9000
2 ஆம் ஆண்டு- ரூ.33,000 ரூ.23,100 ரூ.9,900 ரூ.9,900
3 ஆம் ஆண்டு- ரூ.36,500 ரூ.25,580 ரூ.10,950 ரூ.10,950
4 ஆம் ஆண்டு- ரூ.40,000 ரூ.28,000 ரூ.12,000 ரூ.12,000
  மொத்தம் ரூ.5.02 லட்சம் ரூ.5.02 லட்சம்

 அக்னி வீரர்களின் நிதியும், மத்திய அரசு நிதியும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் அளிக்கப்படும். 

பிற பயன்கள்

பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உளது.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இதற்கு பொது நுழைவுத் தேர்வு (Common Entrace Exam) எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அடுத்தகட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். உடல் தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவைகளுடன் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.250 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் போர்ட்டல் மாற்றும் யூ.பி.ஐ. மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு 15 மார்ச் 2023 அன்று முடிவடைகிறது.

ஹால்டிக்கெட்கள்:

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் 17 ஏப்ரல் 2023 முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in மற்றும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரில் தகவல் குறித்த அப்டேட்களை செக் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) ( 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.03.2023


ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 17,ஏப்ரல், 2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு - https://drive.google.com/file/d/1AuxuEhtH-LKZF7Y6r0UwEu-GNTJqiPf-/preview- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.