சென்னையில் போக்குவரத்து போலீசாருக்காக ஜிபிஎஸ்சில் இயக்கப்படும் அவசர கால ஆம்புலன்ஸ் கண்காணிப்பான எம் சைரன் பைலட் செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபு பங்கேற்றார். சென்னை  சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் தனியார் மருத்துவமனையில் ஜிபிஎஸ் மூலம் இயக்கப்படும் அவசர கால ஆம்புலன்ஸ் கண்காணிப்பான எம் சைரன் பைலட் செயலியை நடிகர் யோகி பாபு தொடங்கி வைத்தார்.



 

இந்த செயலி மூலம் ஆம்புலன்ஸை கண்காணிப்பதற்கும் போக்குவரத்தை அகற்றுவதை உறுதி செய்வதற்கும்  போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுவிப்பதற்கும் காவல்துறைக்கு உதவுகிறது. இது ஆம்புலன்ஸின் இயக்கத்தை எளிதாகவும் வேகமாகவும் இயக்கி அவசர சிகிச்சை நோயாளிகளை விரைவில்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க இந்த செயலி உதவும், மேலும்  ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து காவல் துறைக்கு உதவுகிறது. மேலும் எம் சைரன் பைலட் உலகின் முதல் ஸ்மார்ட் சைரன் டெக்னாலஜி மூலம் இயங்கும் இலவச மொபைல் செயலியை வழங்குகிறது 

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் யோகி பாபு மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை நம்பிதான் நாங்கள் இருக்கிறோம் என்று கூறியதோடு மருத்துவத்தைப் பற்றி தனக்கு ஏதும் தெரியாது எனவும் நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன் எனவும் நகைச்சுவையோடு  கூறினார். முன்னதாக வைஃபை செயலில் இயங்கும் நவீன ஆம்புலன்ஸ்களை கொடி அசைத்து நடிகர் யோகி பாபு தொடங்கி வைத்தார்.

 



 

இதுகுறித்து மருத்துவமனை சார்பில் உள்ள அறிக்கையில்,  சென்னையில் போக்குவரத்து போலீசாருக்காக ஜிபிஎஸ்-ஆல் இயக்கப்பட்ட அவசரகால ஆம்புலன்ஸ் கண்காணிப்பான mSirenPilot ஐ அறிமுகப்படுத்தியது. சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். அலோக் குல்லர் மற்றும் விபத்து மற்றும் அவசரநிலைத் துறை தலைவர் டாக்டர் ஆர் ஸ்ரீராம் ஆர் ஆகியோர் முன்னிலையில் இந்த செயலியை நகைச்சுவை நடிகர் - நடிகர் யோகி பாபு அறிமுகப்படுத்தினார் .



 

mSirenPilot அம்சமானது, ஆம்புலன்ஸைக் கண்காணிப்பதற்கும், போக்குவரத்தை அகற்றுவதை உறுதி செய்வதற்கும் போக்குவரத்து காவல்துறைக்கு உதவுகிறது. இது ஆம்புலன்ஸின் இயக்கத்தை எளிதாகவும் வேகமாகவும் ஆக்குகிறது. mSirenPilot உலகின் முதல் "ஸ்மார்ட் சைரன் டெக்னாலஜி" மூலம் இயங்கும் இலவச மொபைல் செயலியை வழங்குகிறது, இது சாலையில் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பசுமை வழிச்சாலையை முன்கூட்டியே உருவாக்கவும், அவசரகால ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்தில் வேகமாக செல்லவும் உதவுகிறது.