விலை இல்லா விருந்து,  திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ரசிகர்களை சென்னைக்கு அழைத்து நடிகர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.


தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 22 மாவட்டங்களில் விலையில்லா உணவு திட்டத்தை சிறப்பாக செயல்பட்டு வரும் என்பது பெயரை அழைத்து விஜய் நேரடியாக அவர்களை பாராட்டி வருகிறார். இது மக்களுக்கு பசியாற்றும் திட்டம் என்பதால் இதை இடைவிடாமல் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.  மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஜய், பண உதவி தேவைப்பட்டால், என்னிடம் கேளுங்கள் நான் உதவி செய்கிறேன் என்று ரசிகர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சில மாவட்டங்களில் விலையில்லா உணவகத்தை நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு வருவதை கேட்டு அறிந்த விஜய் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற ஓர் ஆண்டுகள் உள்ள நிலையில் தொடர்ந்து விஜய் அவர்களின் நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது ,அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது