வெங்கையா நாயுடுவின் அரசியல் வாழ்க்கையில் சிறு களங்கம் என்று சொல்ல எதுவும் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


சென்னை மியூசிக் அகாடெமியில் தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பாஜகைவை சேர்ந்த வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் “வெங்கையா நாயுடு மீது அவரது அரசியல் வாழ்க்கையில் சிறு களங்கம் கூட கிடையாது” என புகழாரம் சூட்டினார். அதேபோல் தான் உயிரை காப்பாற்றியதில் மருத்துவருக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் தெரிவித்தார்.


கடவுள் நம்பிக்கை:


”அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு மேம்பட்டிருக்கிறது; விஞ்ஞானிகளால் ஒரு சொட்டு இரத்ததை உருவாக்க முடியுமா? இதெல்லாம் தெரிந்திருந்தும் கடவுள் இல்லை என்று சொல்பவர்களைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 


ஏன் அரசியலுக்கு வரவில்லை தெரியுமா?


அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், கொரோனா பரவல் ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிக பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியாதால் அரசியலுக்கு வரவில்லை.” எனத் தெரிவித்தார்.