தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏபிபி நாடுவிற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்டவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஏபிபி நாடுவிற்கு அளித்த பேட்டியைப் பார்க்கலாம்.


கேள்வி: எதிர்கட்சிகளை முடக்க ஈடி, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியதை எப்படி பார்க்குறீர்கள்?


பதில் : ஆளுந‌ருக்கும், CBI, ED, IT க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரியாத முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.


கேள்வி : மக்களாட்சி, ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றின் மீது பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அதை எப்படி பார்க்கிறீர்கள் ?


பதில் : ஊழல்,  முறைகேடு,  லஞ்சம் இவைதான் திமுகவின் மக்கள் ஆட்சி,  ஜனநாயகம்,  சட்டம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஜனநாயகம் மக்களாட்சி சட்டம் என்பது வேறு. அவர்கள் இந்திய அரசு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதால் அப்படி சொல்கிறார்கள்.


கேள்வி :- அதிமுக,  பாஜக கட்சிகள் சட்டம் ஒழுங்கு குறித்து பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். எங்களது இலக்கு 40க்கு 40 என தெரிவித்துள்ளாரே ?


பதில் : 40 இடங்களை ஜெயிக்க வேண்டும் என நினைப்பது தவறு கிடையாது. ஆனால் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லி வருவது திமுக , விசிக, திக, மதவாத கருத்துக்களையும் வெறுப்பையும் திணிப்பது திமுகதான். 


கேள்வி : நேர்மறையான அரசியலுக்கும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மத அடிப்படையில் பிளவுபடுத்தி அரசியல் செய்கிறார்கள் என காட்டமான விமர்சனம் செய்துள்ளாரே ?


பதில் :  மதவாதம் பேசுவது திமுகதான் பாரதிய ஜனதா கிடையாது. காங்கிரஸ் திமுக மட்டுமே மதவாதத்தை பேசி வருகிறது.



கேள்வி : - தலைவர்கள் பெயரை கூறியவுடன் என்ன நினைவுக்கு வருகிறது என்ற கேள்விக்கு, பிரதமர் நரேந்திர மோடி பெயரை தெரிவித்தவுடன், " அவர் முதலமைச்சராக இருந்த பொழுது, மாநில உரிமைகள் குறித்து பேசி உள்ளார் என " தெரிவித்துள்ளார் , அதை எப்படி பார்க்கிறீர்கள் ?



பதில் : 
ஸ்டாலின் அவர்களுக்கு பாதி புரிந்து உள்ளது. பிரதமர் ஆன பிறகு நாட்டின் நலம் குறித்து பேசுகிறார் , என்பதையும் சேர்த்து அவர் சொல்ல வேண்டும். ஒரு மாநிலம் என்பது ஒரு நாட்டிற்குள் அடக்கம் , என்பதை முதல்வராக இருப்பவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னால் , அவருக்கு குறுகிய கண்ணோட்டம் தான் இருக்கிறது . தேசிய பார்வை இல்லை என்பது தெளிவாகிறது.



கேள்வி : பாஜக தமிழ் நாட்டு மக்களிடம் பரவவில்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை என தெரிவித்திருக்கிறார்  அதை எப்படி பார்க்கிறீர்கள் ?


 
பதில் : அது அவருடைய விருப்பம் அது அவருடைய ஆசை  பாஜக படர்ந்து விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது


கேள்வி : பிரதமர் வேட்பாளர் இல்லாமல் இருந்தாலும்  மன்மோகன் சிங் 10 ஆண்டுகாலம் பிரதமராக வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாக சுட்டிக் காட்டுகிறாரே  ?



பதில் : மாய மந்திரம் செய்தாலும்  எதிர்க்கட்சிகள்  ஆட்சிக்கு வர முடியாது மன்மோகன் சிங் ஆட்சியில், தான் திமுகவை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.